shadow

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பவர்ஸ்டார் பவன்கல்யாண் பாரட்டு தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

அன்புக்குரிய தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம் உங்கள் அரசின் செயல்பாடுகள் உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’

இவ்வாறு பவர்ஸ்டார் பவல்கல்யாண் அந்த டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்