பல்வேறு பண மோசடிகளில் சிக்கிய பவர் ஸ்டார் சீனிவாசன் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியாக டெல்லி போலீசார் அவரை 50 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துவிட்டார். சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று எழும்பூரில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த அவரை சிவகாசி போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால்நீதிமன்றத்தில் வாங்கிய முன் ஜாமீனை  கட்டி போலீசாரிடமிருந்து தப்பிவிட்டார் பவர்ஸ்டார்.

Leave a Reply