சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் தினமும் 2 மணி நேரம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாட்டை சமாளிக்க மாநிலம் முழுவதும் சமமான அளவுக்கு பாரபட்சமில்லாத மின்வெட்டை அமல்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி சுழற்சி முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. பின்னர் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததையடுத்து மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பல்வேறு மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள பழுது போன்ற காரணங்களால் மின்பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் மீண்டும் மின்வெட்டை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.

Leave a Reply