டென்னிஸில் மட்டுமே பிரிகிறோம். நட்பு தொடரும். சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ்

டென்னிஸில் மட்டுமே பிரிகிறோம். நட்பு தொடரும். சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ்

Poor results in recent times led to split: Sania Mirza and Martina Hingis

மகளிர் டென்னிஸ் இரட்டையர்கள் போட்டியில் தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வந்த இந்தியாவின் சானியா மிர்சா, சுவிஸ் நாட்டை சேர்ந்த மார்ட்டினா ஹிங்கிச் ஜோடி பிரிந்தது. தங்களது ஜோடி எதிர்பார்த்த வெற்றியை குவிக்காததால் பிரிந்துவிட்டதாகவும் இருப்பினும் வரும் அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கடைசியாக இணைந்து விளையாட திட்டமிட்டுள்ளதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்று கூறியிருப்பதாவது:

இதுவரையில் இருவரும் இணைந்து 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் உள்பட, 14 சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ள நிலையில், இந்த சீசனின் எஞ்சிய ஆட்டங்களில் இருவரும் வேறு வீராங்கனைகளுடன் ஜோடி சேர்ந்து ஆடுவது என முடிவு செய்துள்ளோம். தொடர்ந்து பல வெற்றிகள் பெற்றபோதிலும் சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் இணைந்து விளையாடியபோது, எங்களால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற இயலவில்லை. இது முற்றிலும் விளையாட்டு ரீதியிலான முடிவே. எங்களின் தனிப்பட்ட நட்பு தடையின்றித் தொடரும். இறுதியாக, நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் வகையில், அக்டோபரில் சிங்கப்பூரில் நடைபெறும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இணைந்து பங்கேற்போம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.