ரஜினியின் ‘மாஸ்டர் ஸ்டோக்” இன்றைய அரசியல்வாதிகளுக்கு புரியாது: அப்துல்கலாம் உதவியாளர் கருத்து

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய கருத்து குறித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் உதவியாளர் பொன்ராஜ் அவர்கள் கருத்து தெரிவித்ததாவது:

ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் மாஸ்டர் ஸ்ட்ரோக் இன்று இருக்கக்கூடிய அரசியல்வாதிகளுக்கு சுத்தமாக புரியாது. இன்று இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு தகுதி இல்லை. இன்றைய அரசியல்வாதிகள் ரஜினியின் அரசியல் மாற்றத்தை உணர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இன்னும் அதிக காலம் தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு மாஸ்டர் ஸ்டோக் தான் அவர் பதிவு செய்துள்ளார் அ

ரஜினியை நான் தொடர்ந்து பலமுறை சந்தித்துள்ளேன். அப்போது அவரிடம் பல கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். அன்று அவர் என்னிடம் என்ன சொன்னாரோ, அதைத்தான் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வெளிப்படையாக வெளிப்படையாகக் கூறினார். அதே தான் இன்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்

2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு எத்தனையோ மாற்றங்கள் நடந்து உள்ளது. திமுகவும் அதிமுகவும் மாறி மாறி பலம் பெற்றுள்ளது. இத்தனைக்கும் பிறகும் கூட, பல்வேறு மாற்றங்கள் நடந்து உள்ள நிலையிலும், தான் எடுத்த கொள்கை முடிவில் மாறாமல், சிஸ்டம் சரியில்லை சிஸ்டத்தை மாற்ற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் கலந்து பேசி என்ன முடிவெடுத்தாரோ, அதிலிருந்து அவர் ஒரு இன்ச் கூட பிறழாமல் அவர் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான ஒன்று

அரசியல் நிலையை, இப்படிப்பட்ட ஒரு தெளிவான பார்வையை இதுவரை யாரும் சொன்னதில்லை. நான் அரசியலுக்கு வருகிறேன், நான் அரசியலுக்கு வந்தால் இப்படித்தான் என்னுடைய கட்சி இருக்கும், என்னுடைய கொள்கைகள் இருக்கும், இப்படித்தான் என்னுடைய ஆட்சிமுறை இருக்கும் என்று யார் கூற முடியும்?

Leave a Reply