shadow

பொங்கல் ரிலீஸ் படங்கள்: பத்து மூன்றானது எப்படி?

வரும் பொங்கல் தினத்தில் பத்து படங்கள் ரிலீஸ் ஆகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்று தமிழ்ப்படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாகியுள்ளது.

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ விக்ரமின் ஸ்கெட்ச், மற்றும் பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’, ஆகிய தமிழ் படங்களும் பவன்கல்யாண் நடித்த அஞ்ஞாதவாசி, நயன்தாராவின் ஜெய்சிம்ஹா ஆகிய தெலுங்கு படங்களும் மற்றும் ஆங்கில, மலையாள படங்கள் என மொத்தம் 15 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

பொங்கல் தினத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மதுரவீரன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்கள் போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் பிப்ரவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply