பொங்கல் விடுமுறை ரயில் டிக்கெட்: ஒருசில மணி நேரங்களில் முடிந்ததா?

பொங்கல் விடுமுறை ரயில் டிக்கெட்: ஒருசில மணி நேரங்களில் முடிந்ததா?

2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோருக்கான ரயில் டிக்கெட் முன் பதிவு இன்று தொடங்கிய நிலையில் முன் பதிவு டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023 -ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே ஜனவரி 15,16, மற்றும் 17 விடுமுறை நாட்கள் ஆகும்

இதனையொட்டி ரயில் பயணத்துக்காக, 120 நாள்களுக்கு முன்னதாகவே ரயில்களில் முன்பதிவு செய்யலாம் என்ற நிலையில் இன்று முன்பதிவு தொடங்கியது

இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய முன்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டதால் பலர் ஏமாற்றமடைந்தனர்.