ஸ்டாலின் உடலில் முகமது அலி ஜின்னாவின் ஆவி: பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டாலின் உடலில் முகமது அலி ஜின்னாவின் ஆவி: பொன்.ராதாகிருஷ்ணன்

காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கம், குடியுரிமை சட்டதிருத்தம் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறிய கருத்துக்களும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறிய கருத்துக்களும் ஒரே மாதிரியாக இருந்ததாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வந்த பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனத்திற்கு பின்னர் பேட்டியளித்தபோது, ‘வருங்கின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி குடியுரிமை சட்டம் குறித்து திமுக பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும், ஸ்டாலின் உடலில் முகமது அலி ஜின்னாவின் ஆவி புகுந்துள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.

அதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் வராது என ஏற்கனவே பாஜக தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply