கருணாநிதி குறிப்பிட்ட புல்லுருவிகள் திமுகவில்தான் இருக்கின்றனர். பொன்.ராதாகிரிஷ்ணன்

கருணாநிதி குறிப்பிட்ட புல்லுருவிகள் திமுகவில்தான் இருக்கின்றனர். பொன்.ராதாகிரிஷ்ணன்

pon.radhaசட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, ‘சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில் சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி பேசியபோது, ‘கடைசி நேரத்தில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த செய்தியால், சூழ்ச்சி செய்யப்பட்டு தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட்டது என்றும் இதனால்தான் ஆட்சிக்கு வரவேண்டிய திமுக, எதிர்க்கட்சியாக வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் பேசினார்.

கருணாநிதியின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் பதிலளித்து கூறியதாவது:- கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்விக்கு பலர் காரணமென்றும் அதற்கான விளைவை அவர்கள் சந்திப்பார்கள் என்றும் கலைஞர் கூறி இருக்கிறார். யாரை என்று உறுதிப்பட கூறவில்லை. ஆனால் புல்லுருவிகள் என்று குறிப்பிட்டுள்ளார். புல்லுருவிகள் என்றால் தி.மு.க.வின் உள்ளேயே இருக்கும் சிலர்தான் இதை செய்து இருக்க முடியும். அவர்கள் யார் என்பதை அறிந்து பெயரை குறிப்பிடாமல் சொல்லி இருக்கிறார்.

பிரதமர் அலுவலகத்துக்கும், தேர்தலுக்கும், தேர்தல் முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நன்கு அறிவோம். தேர்தல் ஆணையம் கடந்த காலங்களை விட இம்முறை சற்று கடுமையாக இருந்ததை மறுக்க முடியாது. ஆகவே கலைஞர் குறிப்பிட்டு சொல்லி இருக்கும் தி.மு.க.வின் தோல்விக்கான காரணங்களில் புல்லுருவிகள் முழுமையாக ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. தனது கட்சியில் சரி செய்ய வேண்டியதை சரி செய்து விட்டாலே பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட முடியும் என்பதை கலைஞரும் அறிவார். தி.மு.க. காங்கிரசோடு கூட்டணி அமைத்ததும் தோல்வி உறுதியாகி விட்டது என்பதை அனைவரும் அறிவர். குறிப்பாக காங்கிரசுக்கு தெரியும். தி.மு.க. சரித்திரத்தில் முதல் முறையாக தொகுதிப் பங்கீட்டில் தகுதியற்றவர்களுக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்ததை தி.மு.க.வினரே குறை கூறினார்கள். இது யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்குத்தான் சமம். பிரச்சனையை தங்கள் பக்கம் வைத்து விட்டு அடுத்தவர் மீது பழி சுமத்துவது சரியல்ல.

Leave a Reply

Your email address will not be published.