சென்னை அருகே உள்ள திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோவிலில் பாலிதீன் பைகள் பயன்பாட்டை தடை செய்ய பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அறநிலையத்துறை இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து, 150 கிலோவுக்கும் மேற்பட்ட பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாலிதீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறையும் அறிவிப்பு செய்தது. ஆனாலும் தொடர்ந்து பாலிதீன் பயன்பாடுகள் நடந்துகொண்டே இருப்பதால், பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்
திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோவில் பிரசாதமும் பாலிதீன் பைகளில்தான் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்ரி அங்கு விற்கப்படும் அம்மன் படமும் பாலிதீன் பைகளில் போட்டுத்தான் விற்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையும், மாசுகட்டுப்பாடு வாரியமும் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.