பால் பாக்கெட்டுக்களை திருடும் போலீஸ்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

ஒரு சில மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது பால் பாக்கெட்டுகளை அந்த நடிகரின் ரசிகர்கள் திருடுவதாக தமிழகத்தில் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் போலீஸ்காரர் ஒருவரே பால் பாக்கெட்டுகளை திருடிய சிசிடிவி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நொய்டா என்ற பகுதியில் தெருவில் பால் பாக்கெட்டுகள் கொண்ட பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த வழியாக வந்த போலீஸ் வாகனம் ஒன்று அந்த பால் பாக்கெட் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தின் அருகே நின்று அதில் இருந்து ஒரு போலீஸ்காரர் இறங்கி இரண்டு பால் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வண்டியில் ஏறிச் செல்வது போன்ற சிசிடிவி காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த வீடியோவை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. திருட்டை ஒழிக்க வேண்டிய போலீஸே இந்த செயலை செய்யலாமா? என நெட்டிசன்கள் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply