shadow

law collegeசென்னையில் இயங்கி வரும் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இரண்டாகப் பிரித்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 200 பேர் சேர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். ஒருகட்டத்தில் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததால், போலீஸார் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சட்டக்கல்லூரியை இடம் மாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக தலைமைச் செயலகத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி மாணவர்களின் பிரதிநிதிகள் பத்து பேர்கள் மட்டும் தலைமை செயலாளரை சந்திக்க அனுமதி கொடுத்தனர்.

தலைமைச்செயலாளரை சந்தித்துவிட்டு திரும்பிய மாணவர்கள், அவர் தங்களுக்கு அளித்த பதிலில் திருப்தி இல்லை என்றும் அதனால் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். மேலும் நேரம்  ஆக ஆக மாணவர்களின் கூட்டம் பெருகிக்கொண்டே போனது

law college 1

இதனால் என்.எஸ்.சி.போஸ் சாலை, பாரிமுனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்து சென்று ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப்பாதையில் மறியல் செய்தனர்.

இதனால், பாரிமுனை சுற்றுவட்டார பகுதி சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் தேங்கி நின்றன. பொதுமக்கள் நடந்து செல்லக்கூட வழியில்லாமல் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

பாரிமுனையில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி காரணமாக அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ல் இதனால் போலீஸார் மாணவர்களிடம் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் போராட்டத்தை கைவிட மாணவர்கள் தயாராக இல்லாததால் வேறு வழியின்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்ய ஆரம்பித்தனர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
 அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். தடியடியில் சில மாணவர்கள் காயம் அடைந்தனர். மாணவர்கள் திருப்பித் தாக்கியதில் சில போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது.

போலீஸார் தடியடி நடத்தி கூட் டத்தைக் கலைத்த பிறகே போக்கு வரத்து மெல்ல மெல்ல சீரானது. மாணவர்களின் மறியலால் 4 மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

Leave a Reply