சமூக விரோதிகளோடு ரஜினிகாந்திற்கு தொடா்பு: நாம் தமிழர் கட்சி புகார் மனு

சமூக விரோதிகளோடு ரஜினிகாந்திற்கு தொடா்பு: நாம் தமிழர் கட்சி புகார் மனு

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்றபோது ‘அமைதியாக நடந்து கொண்டிருந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் இந்த போராட்டம் கலவரமாக மாறியது என்றும், அந்த சமூக விரோதிகளை இனம் கண்டு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று பேசினார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அந்த சமூக விரோதிகளை அடையாளம் சொல்ல வேண்டும் என்று ரஜினி மீது நாம் தமிழர் கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த புகார் மனுவில், போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகளோடு நடிகா் ரஜினிகாந்திற்கு தொடா்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே அவரது பேட்டியை அடிப்படையாகக் கொண்டு ரஜினிகாந்தை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.