இணையத்தில் ஆபாச பாடல்களை வெளியிட்டதாகவும், பெண்களை இழிவுபடுத்தி பல பாடல்களை இயற்றியுள்ளதாகவும் பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் மீது இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் ஜெபதாஸ்பாண்டியன் என்பவர் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து அனிருத் மீது ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘இளம் இசையமைப்பாளர் அனிருத் இணையத்தில் சில ஆங்கிலப்பாடல்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், அந்த பாடல்களில் பெண்களையும், தாய்மார்களையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வரிகள் அமைந்துள்ளதாகவும், அந்த பாடல்களை உடனடியாக இணையத்தில் இருந்து சைபர் க்ரைம் போலீஸ் உதவியால் நீக்கி, அனிருத் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மனு மீது விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய சைபர் க்ரைம் போலீஸாருக்கு கமிஷனர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அனிருத் மீதான இந்த திடீர் புகாரால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply