நுண்ணுயிரை கண்ணில் காட்ட வேண்டுமா? அகம்பாவமாக பேசிய வாலிபருக்கு அடிதடி வைத்தியம் கொடுத்த போலீஸ்

சிவகங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் பெண் போலீசாருடன் கொரோனாவை என் கண்ணில் காட்டுங்கள், கொரோனாவை நான் பார்க்க வேண்டும், முதலமைச்சரை வரச் சொல்லுங்கள். இது என் கோட்டை, நான் அப்படித்தான் வெளியே வருவேன். என்னை ஊரடங்கு உத்தரவு கட்டுப்படுத்த முடியாது என்று அகம்பாவமாக பேசிய வீடியோ வைரல் ஆனது.

இதனை அடுத்து அந்த வாலிபர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் அடித்து நொறுக்கப்பட்டபோது இனிமேல் நான் அவ்வாறு பேச மாட்டேன் என்று அவர் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

இது போல் போலி போராளிகள் நாட்டில் பலர் உள்ளதாகவும் அவர்களை போலீசார் தங்கள் பாணியில் கவனித்து அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன

Leave a Reply