இளைஞர்களின் அடுத்த போராட்டத்திற்கு காவல்துறை வைத்த செக்

இளைஞர்களின் அடுத்த போராட்டத்திற்கு காவல்துறை வைத்த செக்

சென்னை மெரீனாவில் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாற்றில் இடம்பெற்று சாதனை புரிந்த நிலையில் அடுத்த போராட்டத்திற்கு காவல்துறை செக் வைத்துள்ளது. ஆம் இனி எந்த அமைப்பும் மெரீனாவில் போராட முடியாத வகையில் மெரீனாவில் போராட்டம் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது.

சென்னை மெரினாவில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை எந்த அமைப்பும் போராட்டம் நடத்த காவல்துறாஇக் தடை விதித்துள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் சுற்றுலா பகுதியான மெரீனாவில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையின் அமைதியை கருத்தில் கொண்டு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி சென்னையின் முக்கிய இடங்களில் இனிமேல் யாரும் போராட்டம் நடத்த முடியாது என்றும் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்துபவர்களுக்கு உரிய இடங்களில் கண்டிப்பாக அனுமதி தரப்படும் என்றும் காவல்துறையின் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.