பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் அதிமுகவில் இணைந்தார். தொண்டர்கள் அதிர்ச்சி

ramadoss-jayalalithaபாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் எம்.பி. ராமதாஸ், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

பாமகவை சேர்ந்த முக்கிய தலைவர் மு.ராமதாஸ் கடந்த 2004ஆம் ஆண்டு பாமக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுமுதல் 2009ஆம் ஆண்டுவரை அவர் எம்.பி.யாக பணியாற்றினார்.

PMK Ramadoss- jayaஇந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸுடன் அவருக்கு சில மாதங்களாக கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் திடீரென பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருடன் புதுச்சேரி மாநில அ.தி.மு.க. பொறுப்பாளர் பெ. புருஷோத்தமன், எம்.எல்.ஏ. உடன் இருந்தார். இந்த தகவலை அதிமுக தலைமைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாமகவின் முக்கிய தலைவர் ஒருவர் அதிமுகவில் சேர்ந்துள்ளதால் பாமக நிறுவனர் ராமதாஸ் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Leave a Reply