பரபரப்பு தகவல்

ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இன்று காலை அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டுமக்களுக்கு உரையாற்ற இருப்பதாகவும் அதில் அவர் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது

ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும் கூறப்படுகிறது

இருப்பினும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்த முடிவை பிரதமர் நரேந்திர மோடி எடுத்து விட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஊரடங்கை நீட்டிப்பது என, பிரதமர் மோடி முடிவு எடுத்துவிட்டார். வளர்ந்த நாடுகளை விட இந்தியா எடுத்த நடவடிக்கை சிறப்பானது. ஊரடங்கை தொடராவிட்டால் இதுவரை எடுத்த நடவடிக்கை வீணாகி விடும் என்றுடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply