பிரதமரை வரவேற்காமல் அவமதிக்கின்றாரா முதல்வர்?

நாளை பிரதமர் மோடி ஹைதராபாத் வர இருக்கும் நிலையில் அவரை வரவேற்காமல் தனது அமைச்சரை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

நாளை பிரதமர் மோடி ஹைதராபாத் வருகிறார். ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வரும் நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் நேரில் சென்று வரவேற்காமல் தனது சார்பில் அமைச்சர் ஒருவரை அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியையும் பாஜகவையும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.