சீனால் செல்கிறார் மோடி! டோக்லம் குறித்து பேச்சுவார்த்தையா?

சீனால் செல்கிறார் மோடி! டோக்லம் குறித்து பேச்சுவார்த்தையா?

இந்தியா, சீனா இடையே எல்லையில் கடந்த சில மாதங்களாக பதட்ட நிலை இருந்து வரும் நிலையில் இன்று பாரத பிரதமர் நரேந்திரமோடி சீனாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செல்கிறார்.

இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென்ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த சீனாவின் சியாமென் நகரில் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி செல்கிறார்.

இந்த மாநாட்டின்போது, சீன அதிபர் ஸி ஜின்பிங்கு அவர்களை பிரதமர் மோடி சந்திப்பார் என்றும் அப்போது இருதரப்பு உறவுகள், தீவிரவாத எதிர்ப்பு, பொருளாதார விவகாரம் ஆகியவை குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டோக்லம் எல்லைப் பகுதியில் சீனாவும், இந்தியாவும் படைகளை திரும்பப் பெற்று விட்டதால், பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Leave a Reply