shadow

இந்தியா உள்பட 4 நாடுகள் சார்க் மாநாடு புறக்கணிப்பு. பாகிஸ்தான் அதிர்ச்சி

saarcகாஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் பங்கேற்க மாட்டார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது குறித்து நேபாளத்தில் உள்ள சார்க் அமைப்பின் தலைமையகத்திற்கு இந்திய சார்பில் கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டது. அந்த கடிதத்தில கூறியுள்ளதாவது:-

தற்போது நிலவும் சூழ்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் மாநாட்டில் இந்திய அரசால் பங்கேற்க முடியாது.

அண்டை நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவதில் இந்தியா தற்பொழுதும் உறுதியுடன்தான் உள்ளது. ஆனால் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத சூழலை உருவாக்கினால் மட்டுமே இதனை முன்னெடுக்க முடியும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்ததை அடுத்து சார்க் நாடுகளின் மற்ற உறுப்பினர்களான ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Reply