shadow

பிரதமர் மோடி மீண்டும் வெளிநாடு பயணம்: இம்முறை ரஷ்யா

பாரத பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதில் இருந்து இதுவரை உலக வரைபடத்தில் உள்ள நாடுகள் அனைத்திற்கும் கிட்டத்தட்ட அவர் சென்றுவந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தற்போது ரஷிய அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் வரும் 21-ம் தேதி சோச்சி நகருக்கு செல்கிறார்.

இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த பயணத்தின்போது உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என கூறப்படுகிறது.

கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் சி ஜின்பிங்-கை சந்தித்து சர்வதேச பிரச்சனைகள் மற்றும் இந்தியா-சீனா இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply