shadow

பிரதமர் மோடிக்கு ஆப்கானிஸ்தானின் மிக உயர்ந்த விருது

modiஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆப்கனின் மிக உயர்ந்த விருதான காஸி அமானுல்லா கான் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராட் என்ற நகரில் இந்தியா – ஆப்கானிஸ்தான் நட்புறவின் அடையாளமாக 1400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியா கட்டித்தந்துள்ள சல்மா என்ற அணைக்கட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையில் நிலவும் நட்புறவின் அடையாளமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணை 20 கிமீ நீளம், 3 கிமீ அகலத்தில் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் சுமார் 80,000 ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதியை பெறும்.

இந்த அணை திறக்கப்பட்ட விழாவிலேயே பிரதமர் மோடிக்கு ஆப்கனின் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் காஸி அமானுல்லா கான் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply