சலுகை அறிவிப்புகள் வெளிவரும் என தகவல்

இந்தியா முழுவதும் இரண்டாம் கட்டமாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் சிறு குறு தொழில் அதிபர்கள் ஆகியோர்களுக்கு உதவி செய்யும் வகையில் பிரதமர் மோடி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுடன் பல மணி நேரம் ஆலோசனை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதித் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிகிறது. ஏற்கனவே முதல்கட்ட ஊரடங்கு உத்தரவு போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி நிவாரண தொகை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் சிறு குறு தொழில் செய்பவர்களுக்கான நிவாரணம் மற்றும் உதவித்தொகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது

இதனை அடுத்து வெகுவிரைவில் பிரதமர் மோடியிடம் இருந்து அதிரடி அறிவிப்புகள் வரும் என்றும் அந்த அறிவிப்புகளில் எளிய மக்களுக்கான சலுகைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply