நாளை மறுநாள் தமிழக முதல்வருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

இந்தியா முழுவதும் இரண்டாவது அலையின் தாக்கம் குறைவடைந்து விரைவில் மூன்றாவது அலையின் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதனை அடுத்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசித்து வரும் பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆகியோருடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனையில் மூன்றாவது அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அவர் பேசுவார் என்றும் கூறப்படுகிறது

பிரதமர், மோடி, முதல்வர், ஆலோசனை,