shadow

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளரான டெனால்டு டிரம்ப் நேற்று வாஷிங்டனில் நடைபெற்ற ஆடம்பரமான விழா ஒன்றில் முறைப்படி அமெரிக்காவின் அதிபராக பதவியேற்று கொண்டார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் பதிவு செய்த டுவிட்டில் ”அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்துகள். வரும் ஆண்டுகள் அமெரிக்க சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு டுவீட்டில், இந்தியா -அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த, ட்ரம்புடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

Leave a Reply