இன்று வேலையில்லா திண்டாட்ட நாள்: காங்கிரஸ் அறிவிப்பு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி இன்று பிரதமரின் பிறந்தநாளை வேலையில்லாத் திண்டாட்டம் நாள் என்று குறிப்பிட்டுள்ளது

பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே செல்வம் கொழிக்கும் திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாகவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் எந்தவித அக்கறையும் அவருக்கு இல்லை என்றும் அதனால் அவருடைய பிறந்தநாளை வேலையில்லாத் திண்டாட்ட நாளாக அனுசரிக்க வேண்டும் காங்கிரஸ் கூறியுள்ளது