வயிற்றுவலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவி கர்ப்பம்: அதிர்ச்சியில் பெற்றோர்

திருச்சி மாவட்டம் லால்குடியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி, வயிற்றுவலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதால் அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் கீழ்மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் என தெரிய வந்தது.

இதனையடுத்து கீழ்மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.