shadow

download (2)

பிளஸ் 2 தனித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 பிளஸ் 2 தனித் தேர்வுக்கு அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 இந்த நிலையில், தனித் தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு கால அவகாசம் ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 இந்தச் சேவை மையங்களின் விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply