shadow

தயவுசெய்து எனது புகைப்படத்தை அழித்துவிடுங்கள்: ரவிசாஸ்திரி

ரவி சாஸ்திரியின் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் வரைந்த நிலையில் அந்த புகைப்படத்தை தயவு செய்து அழித்து விடுங்கள் என ரவிசாஸ்திரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் இந்திய பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடினார்

அப்போது ரசிகர் ஒருவர் ரவி சாஸ்திரியின் புகைப்படத்தை தான் இரண்டு மணிநேரங்களில் வரைந்து உள்ளதாகவும் அந்த புகைப்படம் எப்படி இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

அதை பார்த்த ரவிசாஸ்திரி தயவுசெய்து இதை அழித்து விடுங்கள் என்று கூறியதோடு அழுகிற மாதிரியான எமோஜியையும் பதிவு செய்துள்ளார் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது