நேற்று முன் தினம் தனியார் நிறுவன குளிர்பானம் குடித்து 9 வயது சிறுமி உயிரிழந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் நேற்று கோவையில் உள்ள ஒரு கடையில் அதே நிறுவன குளிர்பான பாட்டிலில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததால் பெரும் பரபரப்பு அடைந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண், தனது குழந்தைகளுக்காக ஒரு பெரிய தனியார் நிறுவன குளிர்பான பாட்டிலை வாங்கியபோது, தற்செயலாக அதன் உள்ளே பார்த்தார். பாட்டிலின் உள்ளே பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தில் அதற்குரிய பில்லுடன் சென்று புகார் அளித்தார். அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு ஊர்களில் விற்பனையான குளிர்பான பாட்டிலில் இதுமாதிரியான புகார்கள் வந்து கொண்டிருப்பதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் பரவியுள்ளது.

Leave a Reply