2012ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரப் பகுதியில் விஞ்ஞானிகள் சேர்ந்து பிரமாண்ட அணுத்துகள்களை ‘கொல்லீடர்’ என்ற ராட்சத குழாயில் மிக அசுர வேகத்தில் மோத விட்டு, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அணுத்துகள்கள் இப்படி மோதியதால் தான் பூமி உட்பட பிரபஞ்சத்தில் கிரகங்கள் தோன்றின என்பதை உலகுக்கு உறுதி செய்தனர்.

இந்த கண்டுபிடிப்புக்கு முதன்முதலில் காரணமானவர்கள் தான் பீட்டர் ஹிக்ஸ் மற்றும் யெங்க்லர்ட். கடந்த 1964ல் யெங்க்லர்ட் மற்றும் அவர் நண்பர் ராபர்ட் பிரவுட் சேர்ந்து ‘கடவுளின் துகள்கள்’ மூலம் தான் பிரபஞ்சம் உண்டானது என்பதை வெளிப்படுத்தினர்.  ஆனால்,  அந்த ஆராய்ச்சி முழுமை பெறவில்லை.   இவர் வெளியிட்ட சில வாரங்களில் பீட்டர் ஹிக்ஸ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார். அவரும் கடவுளின் துகள் என்பதை சொல்லி, அதன்மூலம் தான் உலகம் உண்டானது; கிரகங்கள் உருவாகியிருக்க வேண்டும் என்றார்.

இவர்கள் இருவரின் ஆய்வு முடிவுகளின் படி, கடந்தாண்டு விஞ்ஞானிகள் கூட்டாக சுவிட்சர்லாந்தில் ஆய்வு மேற்கொண்டு உலகுக்கு ‘கடவுளின் துகள்கள்’ பற்றி நிரூபித்தனர். இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதன் மூலம், மேரி கியூரி, ஆல்பர்ட் ஈன்ஸ்டின் வரிசையில் சேர்ந்துள்ளனர்.

கடந்தாண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு, பிரான்சை சேர்ந்த செர்கி ஹரோகி, அமெரிக்காவை சேர்ந்த டேவிட் வைன்லேண்ட் ஆகியோருக்கு கம்ப்யூட்டர் உருவாவதற்கான இயற்பியல் ஆராய்ச்சி  முடிவுகளை வெளியிட்டிருந்தனர். விஞ்ஞானிகள் ஹிக்ஸ், யெங்க்லர்ட் இருவருக்கும் வரும் 11 ம் தேதி சுவீடனில் நடக்கும் விழாவில் நோபல் விருது அளிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *