சைகை மொழியில் நன்றி கூறிய மாற்றுத்திறனாளி பெண்:

வைரலாகும் வீடியோ

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே 4 கோடிக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்கலுக்கு நிதி உதவி செய்த நிலையில் தற்போது ராயபுரம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான மளிகை பொருட்களை கொடுத்து உதவியுள்ளார்

இந்த பொருட்களை பெற்ற அந்த பகுதி மக்கள் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் நிலையில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் தனது சைகை மொழியில் ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

இது குறித்த வீடியோ தற்போது பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply