shadow

16aஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி தன்னுடைய Samsung Galaxy S4 மொபைல்போனை தூங்குவதற்கு முன்னர் சார்ஜில் போட்டுவிட்டு தூங்கியிருக்கிறார். காலையில் எழுந்து பார்த்தபோது அவருடைய சாம்சங் போன் தீப்பிடித்து எரிந்ததோடு, அவருடைய படுக்கையும் சேதமடைந்திருந்தது.

இங்கிலாந்து நாட்டில் Kent’s Holly Hewett என்ற 25 வயது கல்லூரி பெண், தன்னுடைய Samsung Galaxy S4 என்ற மாடல் மொபைல் போனை தூங்குவதற்கு முன்னர் சார்ஜில் வைத்துவிட்டு, பின்னர் தூங்கிவிட்டார். திடீரென நள்ளிரவில் கண்விழித்து பார்த்தபோது தன்னுடைய மொபைல் போன் புகைந்து கொண்டிருப்பதையும், அதனால் தன்னுடைய படுக்கையும் தீயினால் சேதமடைந்திருப்பதையும் பார்த்து திடுக்கிட்டுள்ளார்.

இதனால் அவர் தன்னுடைய அனுபவத்தில் இருந்து கூறியதாவது: இனிமேல் யாரும் இரவு முழுவதும் சார்ஜில் மொபைல்போனை வைத்துவிட்டு தூங்கவேண்டாம்” என்பதுதான்.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

16

Leave a Reply