shadow

shadow

பிலிப்பன்ஸ் நாட்டின் தெருக்களில் ஒவ்வொரு வருடம் ஸூம்பா எனப்படும் நடனம் தெருக்களில் ஆடப்படும். ஒரே நேரத்தில் கோடிக்கணக்கானோர் மஞ்சள் நிற உடையணிந்து தெருக்களில் ஆடும் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்படும். இந்த நடனம் 1990-களில் கொலம்பியாவைச் சேர்ந்த நடன நிபுணர் ஆல்பெர்டோ பேரேஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது.

உடல் எடையை குறைக்க எண்ணுபவர்கள் மற்றும் அழகான வடிவத்தில் இருக்க எண்ணுபவர்கள் கற்கும் ஒரு கலையாக விளங்கி வரும் ஸூம்பா நடனம் ஸால்ஸா, ஸம்பா மற்றும் ஹிப்-ஹாப் ஆகிய நடனங்களின் கலவையாய் இருந்து வருகிறது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் நிகழ்த்தப்பட்ட ஸூம்பா நடனத்தில் எட்டாயிரத்து இருநூற்று முப்பத்திரெண்டு பேர் பங்கேற்று நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தனர். ஆனால் இவ்வருடம் பன்னிரண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தைந்து பேர் மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்து கண்கவரும் வகையில் பங்கேற்று தங்களுடைய முந்தைய சாதனையை முறியடித்தனர். இந்த நடனம் சுமார் முப்பது நிமிடங்கள் நடைபெற்றது. இந்த நடனத்தை உலகெங்கிலும் சுமார் ஒன்றரை கோடி பேர் வாரந்தோறும் பயிற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply