shadow

போதைப்பொருள் குற்றவாளிகளை சுட்டு கொன்றால் பரிசு. பிலிப்பைன்ஸ் புதிய அதிபர் அதிரடி அறிவிப்பு
philippines
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்தமாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட 71 வயது  ரோட்ரிகோ டூடெர்ட் விரைவில் பதவி ஏற்க உள்ளார். அதையொட்டி பிலிப்பைன்சின் தென் பகுதியில் உள்ள தவாயோ நகரில் அவரது ஆதரவாளர்கள் வெற்றி விழா கொண்டாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ரோட்ரிகோ டூடெர்ட் தொலைக்காட்சியில் பேசினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை பொருள் விற்பனை மற்றும் கொலை, கொள்ளை ஆகிய குற்றங்கள் பெருகிவிட்டதாகவும் இவற்றை களைவது அனைவரின் கடமையாகும் என்று கூறிய ரோட்ரிகோ இதற்காக நாம் அனைவரும் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக போரிட வேண்டும் என்ரு கூறினார்..

குற்றச்செயலில் ஈடுபடுவர்கள் மற்றும் போதை பொருள் விற்பவர்களை போலீசார் கைது செய்ய உதவுங்கள் அவர்கள் குறித்த தகவல்களை எனக்கோ, போலீசாருக்கோ டெலிபோனில் தெரிவியுங்கள். அதற்காக இலவச டெலிபோன்கள் எண்கள் உள்ளன.

கைது செய்யும் போலீசாருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டாலோ அல்லது போலீஸ் நிலையத்துக்கு வரை மறுத்தாலோ, பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தாலோ பயப்பட வேண்டாம். பொதுமக்கள் அவர்களை தைரியமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும்.

அதற்கு உங்களுக்கு நான் அனுமதி அளிக்கிறேன். உங்களின் இந்த நடவடிக்கைக்கு தண்டனைக்கு பதில் பரிசு வழங்கப்படும். குற்றவாளிகள் மற்றும் போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிரான போரில் எங்களுக்கு உறுதுணையாக இருங்கள் என அவர் பேசினார்.

தேர்தலின் போது தான் பதவி ஏற்ற 6 மாதத்தில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களை அழிப்பேன் என அதிரடி பிரசாரம் செய்து வெற்றி பெற்றார்.

Leave a Reply