தெற்கு பிலிப்பைன்ஸ்சில் உள்ள லபான்கான் நகர மேயர் உகோல் தலும்பா. இவர் அவரது மனைவியோடு மணிலா விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.

அப்போது துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் எதிர் பாராத விதமாக அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதில், மேயர், அவரது மனைவி உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் வழியிலேயே மேயர் உகோல் அவரது மனைவி மற்றும் 1½ வயது சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply