இந்தியாவில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைக்கு தட்டுப்பாடு வருமா?

கேடிலா நிறுவனம் பரபரப்பு தகவல்

இந்தியாவில் இருந்து அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதித்துள்ளது

இதனை அடுத்து இந்தியர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை பற்றாக்குறை ஏற்படும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன

இந்த நிலையில் கேடிலா என்ற மருந்து கம்பெனி இதுகுறித்து கூறும்போது இந்த ஒரு மாதத்தில் 20 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தங்கள் நிறுவனம் தயாரித்துள்ளது இதனால் இந்தியாவில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைக்கு எந்த வித தட்டுப்பாடும் வராது என்றும் தெரிவித்துள்ளது

கேடிலா நிறுவனம் 30 டன் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துப் பொருள்களைத் தயாரித்து உள்ளதாகவும் அது 15 கோடி மாத்திரைகளுக்கு சமமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

உள்நாட்டு தேவைகளுக்கு மட்டுமின்றி வெளிநாட்டு தேவைகளுக்கும் தேவையான அளவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் தயாரிக்க முடியும் என்றும் கேடிலா கூறியுள்ளது திருப்தியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply