சசிகலா எந்த தகுதியும் இல்லாதவர். பி.எச்.பாண்டியன் ஆவேச பேட்டி

சசிகலா எந்த தகுதியும் இல்லாதவர். பி.எச்.பாண்டியன் ஆவேச பேட்டி

அதிமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவரும் சசிகலா பொதுச்செயலாளர் ஆனதற்கும், முதல்வர் ஆவதற்கும் ஆதரவு தந்து கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகிய பி.எச்.பாண்டியன் சற்றுமுன் சசிகலாவை எதிர்த்து ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் 15 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தேன். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் முகத்தில் கொஞ்சம் கூட வருத்தமோ, துக்கமோ இல்லை. ஜெயலலிதா, இறந்தார் என்ற செய்தி கேட்டு சசிகலா ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை. அவருடன் இருந்த அமைச்சர்களும் கண்ணீர் விடவில்லை என்று பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளரை அடிமட்ட தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முறை தவறானது. இதை நான் கடுமையாக கண்டிக்கின்றேன். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கும், முதலமைச்சர் பதவிக்கும் அவர் தகுதியற்றவர்.

ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் எல்லாம் ராஜாஜி அரங்கத்தில் அவரது உடல் அருகில் இருந்தார்கள். இது அவருக்கு செய்யும் துரோகம் ஆகும். விஷம் கொடுத்து என்னை கொன்றுவிடுவார்களோ என என்னிடம் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே கூறியுள்ளார். எனவே ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும். இவ்வாறு பல அதிர்ச்சி தரும் விஷயங்களை பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.

Leave a Reply