சென்னையில் இரண்டு தபால் நிலையங்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாப்பூர், மந்தைவெளி ஆகிய இரண்டு பகுதியில் உள்ள தபால் நிலையங்கள் மீது நேற்று நள்ளிரவு  பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் இரண்டு தபால் நிலையங்கலும் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply