shadow

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் விலை 30 காசுகளும், டீசல் விலை 34 காசுகளும், உயர்ந்து உள்ளது

இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.104.52 என்றும், டீசல் விலை 100.59 ரூபாய் என்றும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பெட்ரோல் விலைக்கு இணையாக 100 ரூபாயை தாண்டியும் டீசல் விலை மேலும் உயர்ந்து கொண்டே இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.