shadow

பெட்ரோல் 8 ரூபாய், டீசல் 6 ரூபாய் குறைந்தது: பொதுமக்கள் மகிழ்ச்சி

இன்று சென்னையில் பெட்ரோல் விலை 8 ரூபாயும், டீசல் விலை 6 ரூபாயும் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகி வருகிறது.

மத்திய அரசு பெட்ரோலுக்கான வாட் வரி ரூ.9ம், டீசலுக்கான வாட் வரி ரூ7ம் குறைத்துள்ளதால் சென்னை உள்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது

மத்திய அரசை அடுத்து தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.