ரூ.100ஐ நெருங்கிய பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில வாரங்களாக உயராமல் ஒரே விலையில் இருந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்றும் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 99.58 என்று விற்பனையாகிறது.

சென்னையில் டீசல் விலை இன்று ஒரே நாளில் 29 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.74 என்ற விலைக்கு விற்பனையாகிறது