shadow

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 41 நாட்களாக எந்த விதமான மாற்றமும் இன்றி விற்பனையாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு மாற்றம் இருக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது

மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடந்து முடியும் வரை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் தேர்தல் முடிந்தவுடன் திடீரென அதிக அளவு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது