ஜப்பானில் நடைபெறும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார். அரை இறுதியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சுடன் நேற்று மோதிய குவித்தோவா 3,6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார்.

அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடிய அவர் 6,3 என வென்று பதிலடி கொடுக்க 1,1 என சமநில ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.
இரு வீராங்கனைகளும் தங்கள் சர்வீசில் புள்ளிகளைக் குவித்ததால், ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. இதில் அபாரமாக விளையாடிய குவித்தோவா 3,6, 6,3, 7,6 7,2 என்ற செட் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார்.

Leave a Reply