தேசத்துரோக வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்றுகொண்டிருக்கும் வழியில் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ராவல் பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நேற்று ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்ததால் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துகொண்டிருந்தார்.
வரும் வழியில் திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறியதால் போலீஸார் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லாமல் ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறியதாவது ‘நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்ப்பதற்காக முஷாரப் நெஞ்சு வலி நாடகம் ஆடுவதாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராக பயப்படுகிறார் என்றும் வாதாடினார். ஆனால் இதை மறுத்த முஷாரப் வழக்கறிஞர் அகமது ரஸா, ‘முஷாரப் ஒரு கமாண்டர், அவர் எதற்கும் அஞ்சாதவர் என்று கூறினார்.

பின்னர் இந்த வழக்கு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply