shadow

world-of-umbrellas

கல்விதானம், அன்னதானத்தை அடுத்து குடை, காலணி தானம் முக்கியம் என்கிறது ஒரு கதை. மே 4 முதல் 25 வரை நீடிக்கும் அக்னி நட்சத்திர காலத்தில் இதைச் செய்யலாம். பரசுராமரின் தந்தை ஜமதக்னி அம்பு எய்வதில் கெட்டிக்காரர். அவர் அம்பு வீசும்போது, கீழே விழுபவற்றை அவரது மனைவி ரேணுகாதேவி எடுத்து வருவாள். ஒருமுறை அவர் வீசிய அம்புகளை எடுத்து வரதாமதமாயிற்று.ஏன் தாமதமாக வந்தாய்? என்றார் ஜமதக்னி. சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதன்காரணமாக அந்த மரநிழலில் சற்று நின்று இளைப்பாறி வந்தேன், என்றாள்.ஜமதக்னிக்கு கோபம் வந்துவிட்டது. தன் வில்லை சூரியனை நோக்கித் திருப்பினார்.சூரியனே! உலகோரை சுட்டெரிப்பதற்கு ஒரு அளவில்லையா? என்று கேட்டு பாணத்தைத் தொடுக்கும் முன், சூரியன் கீழே வந்து, ஜமதக்னியை சரணடைந்தான்.ஒரு குடையையும், காலணிகளையும் ரேணுகா தேவிக்கு கொடுத்து, வெயிலில் இருந்து காத்துக் கொள்ளும்படி வேண்டினான்.அக்னி நட்சத்திர காலத்தில் குடையும், காலணியும் தானமாகக் கொடுத்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.ஏழைகளுக்கு முடிந்தளவு இந்த தானத்தைச் செய்யலாமே!

Leave a Reply