ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி நேற்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இடையடுத்து இவர்கள் மூவரையும் விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசே எடுக்கலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது மகனின் விடுதலை குறித்து முதல்வரிடம் பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வேலூர் சிறையில் நேற்று பேரறிவாளைனை சந்தித்த அற்புதம்மாள் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது “”தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இயற்றப்பட்ட ஒரு வரலாற்று தீர்மானத்திற்கு கிடைத்த வெற்றியும், அங்கீகாரமும் தான் இந்த தீர்ப்பு”. ராஜீவ் கொலை வழக்கில் ஜெயிலில் இருக்கும் மூவரின் விடுதலைக்காக தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாகவும், தாயுள்ளம் கொண்டு முதல்வர் அவர்களை விடுதலை செய்வார் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply