shadow

இன்று முதல் தமிழகம் முழுவதும் பெப்சி-கோக் விற்பனை நிறுத்தம்

சமீபத்தில் சென்னை மெரீனாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்ச்சிகளில் ஒன்று வெளிநாட்டு பானங்களை தவிர்ப்பது என்ற முடிவை எடுத்தது.

கடந்த பல ஆண்டுகளாக அவை குளிர்பானங்கள் இல்லை பூச்சிமருந்து என்று பல்வேறு சமூகநல ஆர்வலர்கள் கூறியபோது ஏற்றுக்கொள்ளாத பொதுமக்களும், வணிகர்களும், ஒரே வாரத்தில் மாணவர்கள் எழுச்சிக்குரலால் விழிப்புணர்வு அடைந்து அதை செயல்படுத்தவும் செய்தனர்.

கடந்த மாதமே வரும் மார்ச் 1 முதல் பெப்சி கோக் போன்ற குளிர்பானங்கள் வணிக வளாகங்கள் விற்பனை செய்யப்படாது என்று வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள் அறிவித்ததை அடுத்து இன்று தமிழகத்தின் பல வணிக நிலையங்களில் ‘இங்கு பெப்சி கோக் உள்பட வெளிநாட்டு பானங்கள் விற்பனை இல்லை’ என்ற போர்டுகளை பார்க்க முடிகிறது.

தமிழகம் இன்று முதல் வெளிநாட்டு பானங்களில் இருந்து விடுதலை அடைந்து பாரம்பரிய பானங்களுக்கு மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply