ப.சிதம்பரமும் கைது செய்யப்படுவார்: எச்.ராஜா

ப.சிதம்பரமும் கைது செய்யப்படுவார்: எச்.ராஜா

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில் இதே வழக்கில் ப.சிதம்பரமும் விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேறு தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, ‘ப.சிதம்பரத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கார்த்தி சிதம்பரம் ரூ.14, 500 கோடி வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்க முடியாது. தேவைபட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்யும் வேலையை சிபிஐ பார்த்துக் கொள்ளும் என்று கூறினார்

மேலும் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதின் முதல் படி தான் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டம். அதற்குள் அதனை விமர்சனம் செய்வது சரியில்லை. நிச்சயமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். தமிழக மக்களுக்கு மத்திய அரசு நல்லது செய்யும். தமிழ்நாடும், கர்நாடகமும் எங்களது இரண்டு கண்கள். இதில் வேறுபாடு என்பது கிடையாது. நான்கு மாநில அதிகாரிகளை கலந்து ஆலோசனை செய்யாமல் காவிரி மேலாண்மை வாரியம் எப்படி அமைப்பது?. என்று கூறினார்.

Leave a Reply